Cotton Merchant

இன்னிக்கு புதுசா ஒரு விஷயம் சொல்லப்போறேன். நேத்திக்கு நானும் என் மனைவியும் தமிழ்நாடு கோஆப்டெக்ஸ், அதாவது கைத்தறிக் கழகம் நடத்தற கண்காட்சிக்குப் போயிருந்தோம். அங்க உள்ள நுழைஞ்சவுடனே ரெண்டு பெரிய யந்திரம் வைச்சுருந்தாங்க. அது என்னான்னு பாக்கலாம்னு கிட்டக்கப்போய்ப் பார்த்தோம். அந்த யந்திரத்துக்குப் பேரு தறின்னு சொன்னாங்க. நாம போட்டுக்கறமே விதவிதமா ஆடைகள், அதெல்லாம் அதுலதான் நெய்யறாங்களாம்.



பருத்திச் செடின்னு ஒரு செடி இருக்கு. அந்தச் செடிலேருந்து பஞ்சு எடுப்பாங்களாம். அந்தப் பருத்திப் பஞ்சை வெச்சுண்டு நூல் நூப்பாங்களாம். அந்த நூலை எடுத்துண்டுவந்து, அதுக்கு வேணும்கிற சாயம் ஏத்தி, அதை இந்தத் தறியிலே கட்டி, ஒவ்வொரு இழையா அதுலெ கட்டி, அதுக்கப்புறம் அதை ஆடையா எப்பிடி மாத்தறான்னு செஞ்சு காமிச்சாங்க. ரொம்ப ஜோரா இருந்துது பாக்கறதுக்கு.




எப்பவுமே  தூரத்துப் பச்சை கண்ணுக்கு  குளிர்ச்சின்னு  பெரியவங்க சொல்வாங்க. உங்களுக்கு  புரியறாமாதிரி சொல்றேன். நல்ல வெய்யில் அடிக்கும்போது , கடற்கரை மணல்லே போயி  கடல்லே ஓடற கப்பலைப் போட்டோ  எடுத்து  அதை நம்மகிட்ட காட்டினா   அந்த போட்டோவைப் பாக்கறதுக்கு  நமக்கு  நல்லா இருக்கும்




ஆனா அங்கே போயி  போட்டோ  எடுத்த  போடோகிராபருக்கு  மணல்லே கால் சுட்டு இருக்கும், வியர்த்து ஊத்தி இருக்கும், இதெல்லாம்  போட்டோவைப் பார்த்து  கப்பலை ரசிக்கற  நமக்குத் தெரியாது    அது போலத்தான்,  நமக்கு  பாக்கறதுக்கு ஜோரா இருக்கு, ஆனா அதை நெய்யற அவங்களுக்கு  எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நமக்குத் தெரியுமா?




அந்த  யந்திரத்தைப் பாத்தவுடனே எனக்கு முக்கியமா நம்ம நாட்டு தேசக்கொடிலே இருக்குமே அந்த ராட்டை ஞாபகம் வந்துது. ராட்டை ஞாபகம் வந்தவுடனே, மஹாத்மா காந்தி ஞாபகம் வந்தது. நம்ம நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக் குடுக்க அந்த ராட்டையைத்தானே ஒரு ஆயுதமா பயன் படுத்தினார் மஹாத்மா காந்தி. அவரே உக்காந்து ராட்டையிலெ நூல்நூற்பார், அந்த போட்டோவை நீங்கள்ளாம் பார்த்திருப்பீங்களே!




அந்த  ராட்டையிலே  பருத்தியிலே  விளைஞ்ச பஞ்சை வைத்து  நூல்நூற்பார் மஹாத்மா காந்தி அவர்கள். எதுக்குத்  தெரியுமாஅதுதான் கதர் புரட்சி, ஆமாம்  கதர்லே நெஞ்ச ஆடையைத்தான் போட்டுக்கணும், பட்டுலே  நெய்த ஆடைகளை உபயோகிக்கக் கூடாது  அப்பிடீங்கற கொள்கையை வலியுறுத்தத்தான்  கதர் புரட்சீன்னு  ஆரம்பிச்சார்   மஹாத்மா காந்தி அவர்கள்.





நாம பட்டுச்சொக்காய், பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை எல்லாம் உடுத்திக்கிறோமே, அந்தப் பட்டு எப்பிடி உற்பத்தி பண்றாங்க தெரியுமா? பட்டுப் புழுக் கூட்டை வென்னீர்லெ வேகவெச்சுப் பட்டு எடுப்பாங்களாம். அது மாதிரி வென்னிர்லெ வேக வைக்கும் போது, அந்தப் பட்டுப் பூச்சிக் கூட்டுலெ இருக்குற அத்தனை புழுக்களும் செத்துப் போயிடும் இல்லையா? அதுக்கப்புறமாதான் பட்டு உற்பத்தி செய்யறாங்க. அதனாலதான் மஹாத்மா காந்தி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது அப்பிடீனு சொல்லி, நம்ம நாட்டுலெ பட்டுத்துணியெல்லாம் உடுத்த மாட்டோம்னு சத்யாக்ரகம் பண்ணார்.



மஹாத்மா காந்திதான் பட்டு உடுத்துவதை நிறுத்தி, கதர் அணிவோம், அந்தக் கதரை நாமே தயாரிப்போம்னு ராட்டையிலெ நூல் நூற்க ஆரம்பிச்சார். ஆனா இப்போ விஞ்ஞானம் வளந்திடுத்து இல்லையா? அதுக்கேத்தா மாதிரி இப்பொ கதரை அரசாங்கமே பெரிய பெரிய இயந்திரம் வெச்சுண்டு தயாரிக்கிறது. நம்ம நாட்டுக் கதர்த் துணியெல்லாம் வெளிநாட்டுலெ எல்லாரும் ஆசையா வாங்கிண்டு போய்ப் போட்டுக்கறாங்க, அதுனாலெ நம்ம நாட்டுக்கு நிறைய வருமானம் வருது.



அது மட்டுமில்லை, நம்ம நாட்டுலெ வெய்யில் அதிகம், அதுக்கு கதர்த்துணிதான் ரொம்ப நல்லதுன்னு மஹாத்மா காந்தி மாதிரி பல பெரியவங்க  சொல்லி இருக்காங்க . நாமும் இனிமே பட்டுத்துணியெல்லாம் போட்டுக்க மாட்டோம், கதர்த்துணிதான் போட்டுக்குவோம்னு ஒரு சபதம் எடுத்துக்கலாமா?




எல்லாரும் சொல்லுங்கோ, “இனிமே பட்டுத் துணி போட்டுக்க மாட்டோம். கதர்த்துணிதான் (பருத்தி ஆடைதான்) போட்டுக்குவோம்.”    அப்பிடிதான் ஒரே குரல்ல சொல்லணும்